வடிகட்டிகளை கவனமாக கையாளுங்கள். தண்ணீர் வடிகட்டவில்லை மற்றும்
வடிகட்டுதல் மிகவும் மெதுவாக இருந்தால், குழாயில் இருந்து வரும் வேகமான
தண்ணீரைக் கொண்டு வடிகட்டிகளை கழுவவும் அல்லது தேங்காய் நார் அல்லது
மென்மையான ஸ்க்ரப்பரைப் (Polypropylene Scrubber ) பயன்படுத்தி
மேல்புறத்தில் உள்ள 3 வடிகட்டிகளின் மேல் பகுதியை தேய்த்து
சுத்தப்படுத்தவும். வடிகட்டிகளை சுத்தமான தண்ணீரில் கழுவி, சுத்திகரிப்பு
கருவியை மீண்டும் பயன்படுத்தத் தொடங்குங்கள்.